Monday, December 13, 2010

குரங்குகளின் டார்வின் தியரி


மூன்றாம் வகுப்பில் அல்லது அதற்கு முன்பு இந்தக் கதை பாடபுத்தகங்களில் படித்திருப்பீர்கள். அதே கதேதான் கிளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்டு, மடலில் வந்தது.

1) ஒரு ஊரில் வளவன் எனும் வணிகன் இருந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று தொப்பி விற்று வந்தான். கோடைக்காலத்தில் தொப்பிகளுக்கு அதிகத்தேவை இருக்கும் என்பதால் வகைவகையான தொப்பிகளை தன் சைக்கிளில் அடுக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றான்.

2) உச்சிவெயில் தாண்டிய பிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருந்த மரத்தடியில் சற்று இளைப்பாரலாம் என்று உட்கார்ந்தான். இதமான காற்று மற்றும் வயிறு நிறைய சாப்பிட்டதாலும் ஊர் ஊராகச் சென்ற களைப்பில் கண்ணயந்து விட்டான். சுமார் இரண்டு மணிநேரம் ஆழ்ந்து தூங்கிவிட்டு, விழித்துப் பார்த்தால் அவன் கொண்டு வந்திருந்த தொப்பிகளை மரத்திலிருந்த குரங்குகள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தன. நூற்றுக்கணக்கான தொப்பிகளும் குரங்குகளிடம் இருப்பதால், எப்படி அவற்றைத் திரும்பப் பெறுவது என்று தெரியாமல் விழித்தான்.

3) "ச்...சே..கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாமே என்று தன்னை நொந்து கொண்டு தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அவனின் பரிதாப நிலையை சிரித்துக் கொண்டே பார்த்த குரங்குகளும் தங்கள் தலையில் கைவைத்தன. எப்படியாவது குரங்குகளிடமிருந்து தொப்பிகளைத் திரும்பப் பெற்றால்தான் மறுநாளைக்கு விற்க முடியும்.

4) எல்லாமே கலை நுணுக்கத்துடன் செய்த தொப்பிகள். தலையிலிருந்து கையை எடுத்து தன் தொப்பியைக் கழற்றி உச்சந்தலையை சொரிந்து கொண்டே இந்த சிந்தனையை மனதில் ஓடவிட்டான். குரங்குகளும் தொப்பியைக் கழற்றி தங்கள் தலையைச் சொரிந்தன.

5) தான் செய்வதையே குரங்குகளும் செய்வதைப் பார்த்த வளவனுக்கு ஓர் ஐடியா தோன்றியது. தன் தொப்பியைக் கழற்றி குரங்குகளை நோக்கி வீசினான்.

6) உடனே குரங்குகளும் சற்றும் யோசிக்காமல் தங்கள் தொப்பியைக் கழற்றி வளவனை நோக்கி வீசின. தனது ஐடியா ஒர்க் அவுட் ஆகியதை நினைத்து மகிழ்ந்தவனாக கீழே கிடந்த தொப்பிகளைச் சேகரித்துக்கொண்டு அடுத்த ஊரை நோக்கிச் சென்றான்.
========================================================
ஐம்பது வருடம் கழித்து வளவனின் பேரனும் மாறனும் பரம்பரைத் தொழிலான தொப்பி வியாபாரத்தில் ஈடுபட்டான். வளவனுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் மாறனுக்கும் ஏற்பட்டது.

மீண்டும் ஒருமுறை...

2)
3)
4)
5)

ஆகிய பத்திகளைப் வாசித்து விட்டு அடுத்த பத்திக்குச் செல்லவும்.

7) பாய்ந்து வந்த ஒரு குரங்கு அந்தத்தொப்பியை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறியது. குழப்பத்தில் தலையைச் சொரிந்து கொண்டு நின்றான். மாறனின் நிலையைப் பார்த்த ஒரு குரங்கு ஏன் தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது.

8) பரயாயில்லையே! குரங்குகளிலும் மனிதாபிமானமுள்ளவை உள்ளன என்று மகிழ்ந்து தன் உதவியற்ற நிலையை விளக்கினான். தன் தாத்தாவுக்கும் இது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட்டபோது இப்படித்தான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு தொப்பிகளை மீட்டதாகச் சொல்லியதை குரங்கிடம் விளக்கினான்.

9) மாறனின் சோகக்கதையைக் கேட்டுக்கொண்டிருந்த குரங்கு, மாறனைப்பார்த்து ஏதோ சொல்லிவிட்டு மரத்திற்குத் தாவியது. மீண்டும் மாறன் தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அந்தக் குரங்கு மாறனிடம் அப்படி என்னதான் சொல்லி இருக்கும்?
.
.
.
.
.
.
.
.

.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.இன்னும் கீழே
.
.
.
.
.
.
.
.
..இன்னும்
.
.
.
.
.
.
.
.
..கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
.
"ஏம்லே! மனுசங்களுக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாராலே?"

Thursday, November 25, 2010

தவளைகள்

ஒரே ஒரு காட்டிலே, ஒரே ஒரு கிணறாம்... அந்த கிணற்றுக்குள்ளே எக்கச்சக்கமான தவளைகளாம்!

தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவளைகள். அதே கிணற்றில் இருந்த ஓர் ஆமைக்குப் பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம். ஆமையோ, தவளைகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல், சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே தவளைகளுக்குச் சலித்துவிட்டதாம்.

''சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் நமக்கு வேண்டும்'' என்று முடிவெடுத்து, ஒரு பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம்.நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவளைகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவளைகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகளை எல்லாம் தானே பிடித்துத் தின்ன ஆரம்பித்துவிட்டதாம். பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவளைகள், ''பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்துஅதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்'' என்று வானத்தைப் பார்த்துப் பலமாக யோசித்தனவாம்!

அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு நாரை. ''ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தனை அகலம்! தூய்மையும், பலமும், அசாத்திய திறமையும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுக்காலம் வந்துவிடும்!'' என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்த கிணற்றுத் தவளைகள்!

இந்த முறை அசாத்திய மாற்றம்! தவளைகளுக்குப் போட்டியாக பூச்சிகளை யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவளைகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!

''சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையைப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா... தங்களையே தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?'' என்று மிச்சம் மீதியிருந்த தவளைகள் கவலையோடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்!

நீதி: கதரோ, கதிரோ, காவியோ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவளைகளின் தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை!

Thursday, October 21, 2010

Nice small story

There was a good old barber in Mumbai. One day a florist goes to him for a haircut. After the cut, he goes to pay the barber and the barber replies:"I am sorry, I cannot accept money from you; I am doing a Community Service". Florist is happy and leaves the shop.The next morning when the Barber goes to open his shop, there is a "Thank You" Card and a dozen roses waiting at his door.


A Confectioner goes for a haircut and he also goes to pay the barber he again refuses to take the money.The Confectioner is happy and leaves the shop.The next morning when the Barber goes to open his shop, there is another "Thank you" Card and a dozen Cakes waiting at his door.


A Software Engineer goes for a haircut and he also goes to pay, the barber again refuses the money saying that it was a community service. The next morning when the Barber goes to open his shop, guess what he finds there ?


Scroll down for the answer... . . . . . . .. . . .

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.





A Dozen Software engineers waiting for a free haircut... with
Printouts of forwarded mail mentioning about the free haircut !

Wednesday, October 13, 2010

வானளாவிய மாளிகைக்கு குடிபெயரும் அம்பானி

ஹ்ம்ம்ம்.... பெருமூச்சுதான் வருது. அவனுக்கு யோகம்.
பல் இருக்கிறவன் பக்கோடா திங்குறான். இல்லாதவன் வெறும் வாய சாப்பிட்டு போறான்னு நெனச்சுக்க வேண்டியதுதான்.
என்ன இருந்தாலும் ஓழைச்சு சம்பாரிச்சவன். நல்லா இருக்கட்டும். டே அம்பானி நல்லா இருங்கடா. உங்க ரேஞ்சுக்கு எப்படி முன்னேருவதுன்னு கொஞ்சம் சொல்லி கொடுங்கடா. எங்களுக்கும் நல்லா சம்பாரிச்சு காரு கீரெல்லாம் வாங்கிட்டு சும்மா பந்தாவா போகணும்ன்னு ஆசையா இருக்கு.
ஆனா வாய்க்கும் வைத்துக்குமே சரியா இருக்குடா அம்பானி.

Tuesday, September 21, 2010

வாரத்திற்கு 5 முட்டை

வாரத்திற்கு 5 முட்டை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


அட கஷ்ட்ட காலமே. பாவம் கோழிங்களுக்கு வந்த கஷ்ட காலத்த பாத்தீங்களா? தேர்தல் நெருங்க நெருங்க ஊர்ல இருக்கிற ஆடு, கோழிங்களுகெல்லாம் கெட்டகாலம்தான். ஏ கோழிங்களா இனிமேல் ஒழுங்கா மூடிக்கிட்டு முட்டைய போடுங்க, இனி தி.மு.க காரனுக எல்லாம் கைல ஒரு குச்சிய வெச்சுக்கிட்டு உங்க பின்னாடி உக்காந்து பாத்துக்கிட்டே இருப்பானுக. எப்படியாச்சும் முட்டை, சட்டை ன்னு எதையாச்சும் கொடுத்து ஆட்சிய புடிக்கணும். அதனால நெலமைய தெரிஞ்சு ஒழுங்கா அழகா வெள்ளை வெள்ளையாய் புளுக்... புளுக்... ன்னு முட்டைய போடுங்க பாக்கலாம். இல்லேனா சுளீர்ன்னு பின்னாடி பட்டக்ஸ் மேல ஒன்னு விழும். டேய் சொம்புங்களா, வாங்கடா வாங்க, வந்து அந்த சொம்பை எல்லாம் கலட்டி வெச்சிட்டு ஆளுக்கொரு குச்சிய கைல எடுத்திட்டு போயி கோழி பின்னாடி பாத்துக்கிட்டே திரியுங்க. நமக்கு தேர்தல் ரொம்ப முக்கியம். இப்போ ஜெயிக்கல அப்புறம் நாம எல்லாம் முட்டை போட வேண்டியதாயிடும். ஒடுங்க ஒடுங்க. இளிச்ச வாய் மக்களே, கொஞ்சம் பொறுங்க. தேர்தல் வருதில்ல. இப்போ முட்டை போடுறோம், அப்புறம் மொட்டை போடுறோம், சரியா....

Monday, August 23, 2010

மக்களின் வரிப்பணம்தானே...

கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.

அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?

"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..

சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!

Thursday, August 19, 2010

HAVE CONFIDENCE, TRUST & NEVER LOSE HOPE

CONFIDENCE

Once, all village people decided to pray for rain.

On the day of prayer all people gathered and only one boy

came with an Umbrella,

that's Confidence

***
TRUST

Trust should be like the feeling of a one year old baby

when you throw him in the air,

he laughs......because he knows you will catch him;

that's Trust

***
HOPE

Every night we go to bed,

we have no assurance to get up alive in the next morning

but still you have plans for the coming day ;

that's Hope

***
HAVE CONFIDENCE, TRUST & NEVER LOSE HOPE

Tuesday, August 3, 2010

பொய் முகங்கள் ...

திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது.

முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது.

""நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?

""நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' - இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான்.
ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர்' என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன?

முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது. வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது?
ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்' பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல.

பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர்' என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை.

"கலைஞர்' என்று கருணாநிதியையும், "அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸýம், விஜயகாந்தும்.

""நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'' என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா' என்றும் தனது மகனை "சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம்.

விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன்' என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை.

விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தவர் என்பதால் "கேப்டன்' அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது.
கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸýம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள் } அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்?
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது. பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல. இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸýக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும்.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!